ஜவுளி நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த 2 பேர் கைது


ஜவுளி நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
x

ஜவுளி நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 31). ஜவுளி நிறுவன ஊழியர். இவர் கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சின்ன ஆண்டாங்கோவிலை சேர்ந்த அருண் (22), யுவராஜ் (22), விமல் பசீர் (25), திருநங்கை பாபிலோனா ஆகிய 4 பேரும் சேர்ந்து ராஜாபாண்டியை தாக்கி அவர் வைத்திருந்த ரூ.12 ஆயிரத்தை பறித்தனர். பின்னர் ராஜாபாண்டியைதிருநங்கை பாபிேலானாவுடன் சேர்த்து வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர். தொடர்ந்து இந்த பணம் பறிப்பு குறித்து போலீசில் புகார் கொடுத்தால், புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். இதுகுறித்து ராஜபாண்டி கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் அருண், யுவராஜ் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய விமல் பசீர், பாபிேலானா ஆகியோரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story