தனியார் நிறுவன அதிகாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது


தனியார் நிறுவன அதிகாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவன அதிகாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது

கோயம்புத்தூர்

கோவை

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் சமீர் அலி (வயது 26). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கோவை காந்திபுரம் சத்திரோடு- 100 ரோடு சந்திப்பதில் உள்ள ஒரு பேக்கரி முன் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 பேர்.இவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து இவரது சட்டை பையில் இருந்த 1800 ரூபாயையும், செல்போனையும், பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.இது குறித்து சமீர் அலி காட்டூர்போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து கவுண்டம்பாளையம் காமராஜ் நகர் சேர்ந்த விக்னேஷ் ( 28). உப்பிலிபாளையம் வரதராஜபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரைகைது செய்தனர். செல்போனும், பணமும் மீட்கப்பட்டது.


Next Story