மூதாட்டியிடம் நகைபறித்த 2 பேர் கைது
மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கணபதி
மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நகை பறிப்பு
கோவை கணபதி பி.என்.டி. காலனி கணபதி நகரை சேர்ந்தவர் மீனா ராகவன் (வயது73). இவருடைய கணவர் இறந்து விட்டதால் தனது 3-வது மகனுடன் வசித்து வருகிறார். இவர், கடந்த 7-ந் தேதி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென்று மீனா ராகவன் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்த மீனா ராகவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
2 பேர் கைது
இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார், ஏட்டுகள் ராஜேந்திரன், தினேஷ்குமார் ஆகிய கொண்ட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து மூதாட்டியிடம் நகை பறித்த சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன் மகன் கோபிநாத் (23), அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மகன் ராமச்சந்திரன் என்ற சடையன் (35) ஆகிய 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மீது பல திருட்டு, கொள்ளை வழக்குகள் இருப்பது தெரியவந்தது. சம்பவம் நடந்த 7 நாட்களில் வழிப்பறி ஆசாமிகளை கைது செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வீரராகவன். இவருடைய மனைவி