கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
x

சிவகிரி அருேக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவகிரி அருகே உள்ள உள்ளார் தளவாய்புரத்திற்கு மேற்கே கருவாட்டுப்பாறை அருகில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சிவகிரியைச் சேர்ந்த தங்கவேலு மகன் மகேஸ்வரன் (வயது 20), ராயகிரியைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் ராஜ்கண்ணன் (24) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story