சுசீந்திரம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
சுசீந்திரம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி
மேலகிருஷ்ணன்புதூர்,
சுசீந்திரம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் தலைமையில் போலீசார் சுசீந்திரம் அருகே உள்ள புதுகிராமம் குளக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்ட போது அவர்களிடம் 15 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர்கள் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த ராம்குமார் (வயது 23), இந்திரா காந்திநகரை சேர்ந்த அரவிந்த் (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story