கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
x

விக்கிரமசிங்கபுரத்தில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் போலீசார் அடையகருங்குளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த சதீஸ் (வயது 32), சண்முகராஜன் (39) ஆகியோரை பிடித்து சோதனை நடத்தினர். அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து, 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.


Next Story