கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
x

சேரன்மாதேவி அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே பத்தமடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த பத்தமடை தெற்கு தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்ற காளீஸ்வரன் (வயது 25), பத்தமடை மங்களா தெருவைச் சேர்ந்த ஷேக் தாவூத் (25) ஆகிய 2 பேரை சோதனை செய்தனர். இதில் அவர்கள் கஞ்சாவை விற்பதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காளீஸ்வரன், ஷேக் தாவூத் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story