சின்னசேலம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


சின்னசேலம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 1:51 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார், சின்னசேலம் அடுத்த வீ. கூட்டுரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு கஞ்சாவுடன் நின்றிருந்த பூசப்பாடி மாரியம்மன் கோவில் தெரு சுப்பிரமணியன் மகன் மகேஷ் (வயது 28), சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த சாத்தப்பாடி கிராமம் மடத்தெரு பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் ரங்கநாதன் (28) ஆகியோரை கைது செய்தனா். இவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா, ஆயிரம் ரூபாய் மற்றும் இருசக்கர மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story