கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
ஜோலார்பேட்டை பகுதியில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், பிரபு உள்ளிட்ட போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பாச்சல் ஊராட்சி அண்ணாண்டப்பட்டி கூட்ரோடு பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் பாச்சல் ஊராட்சி அன்னை நகர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் திலீப்குமார் (வயது 24) என்பது தெரிய வந்தது. அவரிடம் சோதனை செய்தபோது 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் இதே போன்று காந்திநகர் பகுதியில் உள்ள ஏரியில் சந்தேகத்தின் பேரில் ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 10 கிராம் கஞ்சா இருந்தது.
விசாரணையில் அவர் பெரியசாமி என்பவரின் மகன் வெங்கடேஷ் (24) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.