கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் கைது


வாய்மேடு அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேடு அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளை முயற்சி

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கில் அமைந்துள்ள மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 12-ந்தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது.

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மேற்பார்வையில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை ேதடி வந்தனர்.

போலீசார் விசாரணை

தனிப்படை போலீசார் செல்போன் எண் சிக்னல் மூலம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வாய்மேடு கிழக்கு ஓந்ததேவன் காடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் வீரமணி (வயது22) மற்றும் ராமசாமி மகன் சத்தியமூர்த்தி (34) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தில் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதையும், வாய்மேடு பகுதிகளில் பல இடங்களில் மிளகாய் பொடி தூவி பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றதையும் ஒப்புக்கொண்டனர்.

2 பேர் கைது

இதையடுத்து வீரமணி, சத்தியமூர்த்தி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து திருடிய பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.


Related Tags :
Next Story