12 கிலோ கஞ்சா விற்ற 2 பேர் கைது


12 கிலோ கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 6:46 PM GMT)

கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

துடியலூர்

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத் தரவின் பேரில் போதை பொருள் ஒழிப்பில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கணுவாய் பேருந்து நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தி கஞ்சா விற்ற மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் மகன் அப்துல் யாசிர் (வயது25), ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆஷிஷ் செல்மா (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 12 கிலோ ்கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story