போலி மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது


போலி மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
x

போலி மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

திருவாரூர்

திருவாரூர் அருகே போலி மதுபாட்டில்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான சொகுசு கார்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலி மதுபாட்டில்கள் விற்பனை

திருவாரூர் அருகே ராணுவ நகர் பகுதியைச் சேர்ந்தவர் எக்பர்ட்(வயது 45). இவர் மீது திருவாரூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு திருட்டு வழக்குகள் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவரிடம் திருவாரூரை அடுத்த விளாகம் பகுதியை சேர்ந்த தினேஷ்(30) என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தயாரிக்கும் வெளிமாநில மது பாட்டில்களை வாங்கி வந்து அதில் தமிழ்நாடு அரசின் மதுபான ஸ்டிக்கரை ஒட்டி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக திருவாரூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மதுபாட்டில்கள்-வாகனங்கள் பறிமுதல்

இதனையடுத்து மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில் ராணுவ நகரில் தங்கியிருந்த எக்பர்ட் மற்றும் தினேஷ் ஆகியோரிடம் இருந்து 618 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விலை உயர்ந்த 2 சொகுசு கார்கள், ஒரு மினி லாரி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது-6 பேருக்கு வலைவீச்சு

இது தொடர்பாக எக்பர்ட்,தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரமேஷ், கலையரசன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அரசு மதுபான ஸ்டிக்கரை போலியாக ஒட்டி கள்ளச்சந்தையில் மதுவிற்ற சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story