கஞ்சா சாக்லெட் விற்ற 2 பேர் கைது


கஞ்சா சாக்லெட் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே கஞ்சா சாக்லெட் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

துடியலூர்

கோவையை அடுத்த காளப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், உதவி சப்-இன்ஸ்பெக்டர் குப்புராஜ் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.

இதில், எல்.என்.ஜி.கார்டன் பகுதியில் மளிகை கடை நடத்திவரும் சண்ணம்குமார் (வயது 33), அங்கீத்குமார் (19) ஆகியோர் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 70 கிலோ கஞ்சா சாக்லெட்டை பறிமுதல் செய்தனர்.


Next Story