மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
காட்டுமன்னார்கோவில் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், தெய்வநாயகம் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரெட்டியூர், பழஞ்சநல்லூர் ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ரெட்டியூர் தொட்டி மதகு பாலம் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த, அதே ஊரை சேர்ந்த சுரேஷ் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 250 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பழஞ்சநல்லூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த ரெங்கநாதன்(59) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 32 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story