நூதன முறையில் லாட்டரி விற்ற 2 பேர் கைது


நூதன முறையில் லாட்டரி விற்ற 2 பேர் கைது
x

நூதன முறையில் லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் முருகன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வைரமுத்து (வயது 45), குருசாமி (40) ஆகியோரை பிடித்து விசாரித்த போது அவர்கள் வாட்ஸ்அப் மூலம் நூதனமுறையில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story