லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 July 2023 1:00 AM IST (Updated: 7 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கோபாலசமுத்திரம் குளம் பகுதியில் வடக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், பஞ்சம்பட்டியை சேர்ந்த பவுல்தீபன் (வயது 26) என்பதும் லாட்டரி சீட்டுகள் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1,500 மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் திண்டுக்கல் லாரி பேட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக, மேட்டுப்பட்டியை சேர்ந்த மோசஸ் (61) என்பவர் மேற்கு போலீசாரிடம் சிக்கினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story