லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் மீனாட்சிபுரம் திருவள்ளுவர் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒழுகினசேரி ஆராட்டு ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் (வயது 62), கோட்டார் தோப்பு வணிகர் வடக்கு தெருவைச் சேர்ந்த பகவதி ஆகிய 2 பேரும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 106 லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி விற்ற ரூ.25 ஆயிரத்து 710 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story