லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
வேதாரண்யம் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்
வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேத்ரின் எஸ்தர் மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை, அகஸ்தியன்பள்ளி பகுதகளில் ரோந்து பணி- வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அகஸ்தியன்பள்ளி குட்டாச்சிகாட்டை சோ்ந்த முருகையன் (வயது45), பெரியகுத்தகை பகுதியை சேர்ந்த காளியப்பன் (64) ஆகியோர் என்பதும், ஆன்லைன் லாட்டரி மற்றும் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் ைகது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1,500, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story