லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x

ஆறுமுகநேரி பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பகுதியில் சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதை தொடர்நந்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாக்குமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆறுமுகநேரி சிவன் கோவிலுக்கு எதிரேயுள்ள தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த வண்முத்து மகன் இசக்கிமுத்து (வயது 60) என்பவரது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் ெசய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதேபோல் வடக்கு ஆத்தூர் பஜாரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆத்தூர் பஜாரில் ஜமாலுதீன் மகன் தமீம் அன்சாரி (32) என்பவர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 30 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story