லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
x

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

நொய்யல் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்ற ஏழுமலை, குமாரசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள், ரொக்கப்பணம் ரூ.3,600-ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story