லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
குளித்தலை சுங்ககேட் மற்றும் பெரியபாலம் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் குளித்தலை சுங்ககேட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற குளித்தலை வைகைநல்லூர் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 50) என்பவரையும், குளித்தலை பெரியபாலம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற மீன்கார தெருவை சேர்ந்த முகமதுரபி (54) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story