திண்டிவனம் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது


திண்டிவனம் பகுதியில்    ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது
x

திண்டிவனம் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் பகுதியில் சிலர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருவதாக திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திண்டிவனம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பூதேரி பகுதியில் சந்தேகத்திடமான வகையில் காரின் முன்பு நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பூதேரி செந்தமிழ் நகரை சேர்ந்த சாதிக்பாஷா மகன் ரகமத்துல்லா (வயது 22), சென்னை அண்ணாநகர் பாடிகுப்பம் காந்திநகர் பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் பிரவீன் (19) ஆகியோர் என்பதும், காரில் லேப்டாப், செல்போன்களை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் லாட்டரிகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 செல்போன், 2 லேப்டாப் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story