லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
கறம்பக்குடி:
கறம்பக்குடி பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் தனிப்படை போலீசார் கறம்பக்குடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி புதுக்குளம் அருகே உள்ள தைல மர காட்டில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த ரமேஷ் (வயது 38), ராவணன் (45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.7,260, ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story