லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
x

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் நகரப் பகுதிகளில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கரூர் மாவடியன் கோவில் தெரு பகுதியில் லாட்டரி சீட்டுகள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த முருகேசன், ரூபினா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story