லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை
அறந்தாங்கி பஸ் நிலையம் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் அறந்தாங்கி சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அப்பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள ஒரு பூக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த அறந்தாங்கியை சேர்ந்த நடராஜன் (வயது 28), சுரேஷ் (39) ஆகிேயாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 இலக்க எண்கள் எழுதிய நோட்டு, 2 செல்போன்கள், ரூ.24 ஆயிரத்து 750 பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story