லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
x

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தளவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் அந்த பகுதியில் நின்றிருந்த 2 பேர் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் மண்மங்கலம் மேற்கூர் பகுதியை சேர்ந்த குமாரசாமி (வயது 62), வெங்கமேடு தீரன்நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (62) என்பதும், இவர்கள் 2 பேரும் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.13,300 ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story