லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வெள்ளனூர் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த தாவூதுமில் பகுதியை சேர்ந்த குமரேசன் (வயது 48), வடசேரிப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (53) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள், செல்போன், பணம் ஆகியவை பறிமுதல் செய்து வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story