லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
குளித்தலை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் குளித்தலை போலீசார் பொய்யாமணி ஊராட்சி பங்களாபுதூர் கடைவீதி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 39), பெரியபனையூர் கடைவீதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்ற அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (48) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story