ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது


ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது
x

ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், லாட்டரி விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவப்பூர் மகாராஜபுரம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 40), ராஜகோபாலபுரத்தை சேர்ந்த அசோக்குமார் (40) ஆகியோரை பிடித்து திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆன்லைன் லாட்டரியில் பயன்படுத்தக்கூடிய 3 இலக்க சீட்டு, 3 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.10 அயிரத்து 840 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன், அசோக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story