கள் விற்ற 2 பேர் கைது


கள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2023 1:15 AM IST (Updated: 8 May 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

கள் விற்ற 2 பேர் கைது

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் கள் இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நெகமம் போலீசார் சின்னேரிபாளையம் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியில் விநாயகர் கோவில் அருகே உள்ள தென்னந்தோப்பில் சுந்தர்ராஜன்(வயது 70) என்பவர் கள் இறக்கி விற்பனை செய்வதற்காக வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். இதேபோன்று வஞ்சிபாளையம் பகுதியில் தெற்கு தோட்டத்தில் ரத்தினம்(36) என்பவர் கள் இறக்கி விற்பனை செய்து கொண்டு இருந்தார். அவரையும் போலீசார் கைது செய்து, 10 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.


Next Story