மணல் கடத்திய 2 பேர் கைது; மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்திய 2 பேர் கைது; மாட்டு வண்டிகள் பறிமுதல்
x

மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டு, மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராம நிர்வாக அலுவலர் அறிவழகன், தா.பழூர் -சுத்தமல்லி சாலையில் இருந்து கார்குடி பிரிவு சாலையில் வந்தபோது, அந்த வழியாக 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

அந்த வண்டிகளை ஓட்டி வந்தவர்களிடம் விசாரித்தபோது, அனுமதியின்றி கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் ஏற்றி கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து தா.பழூர் போலீசில், கிராம நிர்வாக அலுவலர் புகார் செய்தார்.

இதையடுத்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்ததாக கார்குடி காலனி தெருவை சேர்ந்த பரமசிவம்(வயது 55), காசிநாதன்(53) ஆகியோரை தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தார்.

1 More update

Next Story