வீடுகளில் திருடிய 2 பேர் கைது; 79 பவுன் பறிமுதல்


வீடுகளில் திருடிய 2 பேர் கைது; 79 பவுன் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 79 பவுன் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பகுதியில் கடந்த வருடம் 5 வீடுகளில் தொடர்ந்து நகை, பணம் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து சிவகாசி டவுன், திருத்தங்கல், சிவகாசி கிழக்கு ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருவாரூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 33), பொள்ளாச்சியை சேர்ந்த ஹரி பிரசாத் (27) என தெரிய வந்தது. இவர்கள் சிவகாசி பகுதியில் 5 வீடுகளில் சுமார் 54 பவுன் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் தேவகோட்டை பகுதியில் ஒரு வீட்டில் 25 பவுன் நகைகளும் கொள்ளை அடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 79 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்து மணிகண்டன் மற்றும் ஹரி பிரசாத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் விசாரணை நடத்தினார். சிவகாசி பகுதியில் தொடர் கொலை சம்பவங்கள் நடந்து வந்த நிலையில் தற்போது 5 வழக்குகளில் மட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story