மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
தஞ்சை கரந்தை பூக்குளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 78). இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளை பழைய பஸ் நிலையம் அருகே நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாது அதிர்ச்சி அடைந்தார். மோட்டார் சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. அப்போது தான் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கார்த்திகேயன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 40), தட்டாங்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.