மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே உள்ள பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சின்னமுனியாண்டி. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு செம்பட்டியை அடுத்த புல்வெட்டி குளம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து, சின்னமுனியாண்டி செம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, செம்பட்டியை அடுத்த புதுகோடாங்கிபட்டி அருகே மோட்டார் சைக்கிளுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள், சின்னாளப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (31), இதே ஊரை சேர்ந்த பிரகாஷ் (22) என்றும், சின்னமுனியாண்டியின் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story