மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது
x

மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சாவித்திரி தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்களை பிடித்து விசாரணை செய்த போது பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தை சேர்ந்த சிவா (20), பிரேம் குமார் (18) என்பதும், இவர்கள் 2 பேரும் சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story