பெட்ரோல் நிலையத்தில் பேட்டரி திருடிய 2 பேர் கைது
சீர்காழி அருகே பெட்ரோல் நிலையத்தில் பேட்டரி திருடிய 2 பேர் கைது
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் பகுதியில் தனியார் பெட்ரோல் நிலையம் செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இரவு இந்த பெட்ரோல் நிலையத்தில் இரண்டு மர்ம நபர்கள் பேட்டரியை திருடி சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில், விளந்திட சமுத்திரம் அஞ்சலை அம்மாள் நகரை சேர்ந்த இளங்கோவன் மகன் இலக்கியன் (வயது 37), சீர்காழி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த சங்கரன் மகன் முத்து (36) ஆகிய இருவரும் பெட்ரோல் நிலையத்தில் இருந்து பேட்டரிகளை திருடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு பேட்டரியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story