செல்போன் திருடிய 2 பேர் கைது
நெல்லை அருகே செல்போன் திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மேலப்பாளையம் காட்டுப்புத்தூர் தெருவை சேர்ந்தவர் பூகோயா (வயது 32). இவர், தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 4-ந்தேதி கீழ முன்னீர்பள்ளம், புது கிராமம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தின் சீட்டிற்கு அடியில் 3 செல்போன்களை வைத்து விட்டு குளித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது செல்போன்களை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து பூகோயா முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கயல்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மேலப்பாளையத்தை சேர்ந்த மகாபிரபு (31), மேல கருங்குளம், பீடி காலனியை சேர்ந்த சண்முகம் (24) ஆகிய இருவரும் சேர்ந்து செல்போன்களை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மீட்கப்பட்டது.