செல்போன் திருடிய 2 பேர் கைது
செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
திருநெல்வேலி
திசையன்விளை:
கன்னியாகுமரி மாவட்டம் வீரராமன்புதூரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45). இவர் குடும்பத்துடன் உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலுக்கு வந்து இருந்தார். இரவு தூங்கிகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் செல்போனை திருடி சென்றுவிட்டதாக உவரி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக திசையன்விளையை அடுத்த சண்முகபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த பாண்டிதுரை மகன் அஜித்குமார் (21), அப்புவிளை பத்மாவதி நகர் ராமலிங்கம் மகன் ரமேஷ்ராஜா (23) ஆகியோரை கைது செய்தார். செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு கோர்ட்டில் ஆஜர்செய்யப்பட்டு நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story