பொள்ளாச்சி அருகே கோழிகளை திருடிய 2 பேர் கைது


பொள்ளாச்சி அருகே கோழிகளை திருடிய 2 பேர் கைது
x

பொள்ளாச்சி அருகே கோழிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியை சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது வீட்டின் சுற்றுச்சுவா ஏறி குதித்து 2 பேர் கோழிகளை திருடி சென்றதாக தெரிகிறது. இதற்கிடையில் ஜமீன் முத்தூரில் உள்ள இறைச்சி கடைக்கு கோழிகளை 2 பேர் கொண்டு வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பொள்ளாச்சி நரசிம்மன் நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 22), கோட்டூரை சேர்ந்த கவுதம் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலு£ம் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 2 கோழிகள் மீட்கப்பட்டது.


Next Story