நெல்லிக்குப்பம் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது
நெல்லிக்குப்பம் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அருகே உள்ள பில்லாலிதொட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 38). இவர் தனக்கு சொந்தமான 4 ஆடுகளை நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகில் கட்டி வைத்து விட்டு தூங்க சென்று விட்டார். இந்த நிலையில் அதிகாலை நேரத்தில் மர்மநபர்கள் 2 பேர், ரவிக்குமாருக்கு சொந்தமான ஒரு ஆட்டை திருடி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த அவரது உறவினர் கன்னியம்மாள் கூச்சலிட்டார். உடனே எழுந்து வந்த ரவிக்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆடு திருடிய 2 பேரையும் மடக்கி பிடித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், கடலூர் அடுத்த பி.வடுகப் பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் ஜீவா (20), பாதிரிக்குப்பத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி மகன் கலைவாணன் (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர்.