ஆடு திருடிய 2 பேர் கைது


ஆடு திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆடு திருடிய 2 பேர் கைது

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அருகே உள்ள செட்டியக்காபாளையத்தில் ஈஸ்வரன் என்பவரது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடு திருட்டு போனது. இதுகுறித்து அவர், நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் பொள்ளாச்சி சந்தையில் ஆடு விற்பனை நடைபெற்றது. இந்த சந்தையில் ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த பாபு என்ற பிளேடு பாபு(வயது 28), அஜித்குமார்(25) ஆகியோர் ஒரு ஆட்டை கொண்டு வந்தனர். அப்போது அங்கு வந்த நெகமம் போலீசார், சந்தேகத்தின்பேரில் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஈஸ்வரனுக்கு சொந்தமான ஆட்டை திருடி வந்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை கைது செய்ததோடு, ஆட்டையும் மீட்டனர்.


Next Story