ஆடுகளை திருடிய 2 பேர் கைது
ஆடுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள மண்குண்டாம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 51). இவர் 50-க்கும் மேற்பட்ட வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்தநிலையில் தன்னுடைய 2 ஆடுகள் காணாமல் போனதாக வெம்பக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை சோதனை செய்த போது ஆட்டு கிடையில் இருந்து 2 ஆடுகளை மர்மநபர்கள் திருடி செல்வது பதிவாகி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக த குருசாமி (23), செல்வகுமார் (38) ஆகிய 2 பேரையும் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் கைது செய்தார். இதில் 2 ஆடுகளில் ஒரு ஆட்டை விற்பனை செய்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தையும், மற்றொரு ஆட்டையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story