பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது
திருப்பாலைக்குடி அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்
ஆர்.எஸ்.மங்கலம்,
திருப்பாலைக்குடி அருகே உள்ள அரசனூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் மனைவி சத்யா (வயது 29). இவர் கடந்த 15-ந்தேதி தேவிபட்டினம் சென்று விட்டு மொபட்டில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அரசனூர் காலனி அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் சத்யா அணிந்திருந்த 5½ பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த கார்த்திக்(27), தேவிபட்டினம் குமரியேந்தலை சேர்ந்த அசோக் கிருஷ்ணராஜ்(33) ஆகிய 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் சத்யாவிடம் தாலி சங்கிலியை பறித்ததை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story