தம்பதியிடம் நகை பறித்த 2 பேர் கைது


தம்பதியிடம் நகை பறித்த 2 பேர் கைது
x

சோழவந்தான் அருகே தம்பதியிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே நகரி நான்கு வழிச்சாலையில் கடந்த வாரம் மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த பாபுநாயுடு தனது மனைவி பிரியாவுடன் ேமாட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர், பிரியா அணிந்திருந்த தங்க நகையை பறித்து விட்டு தப்பி விட்டனர்.

இது குறித்து சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.இதன் பேரில் இது தொடர்பாக தாராபட்டி கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் (வயது 22), பன்னியான் கிராமத்தைச் சேர்ந்த அஜய் (24) ஆகிய 2 பேரையும் சோழவந்தான் போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story