கறவை மாடுகளை திருடிய 2 பேர் கைது
கறவை மாடுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 54). இவர் 8 கறவை மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை வீட்டின் வெளியே கட்டி இருந்த 2 மாடுகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசில் நித்தியானந்தம் புகார் அளித்தார். இந்தநிலையில் ஆண்டிமடம்- விருத்தாச்சலம் ரோட்டில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு வண்டியில் 2 பேர் சந்தேகத்திற்குரிய வகையில் சென்றனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் சூரக்குடி கிராமத்தில் 2 மாடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, கடலூர் மாவட்டம் கிளிமங்கலத்தை சேர்ந்த ஆனந்த் (25), பாலச்சந்திரன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story