சிறுவனிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது


சிறுவனிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சிறுவனிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் நேற்று வந்து கொண்டிருந்த சிறுவனிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து சிறுவன் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த மகபூப் பாட்ஷா மகன் பஷீர் (வயது 24) மற்றும் தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மகன் மாடசாமி (21) ஆகிய 2 பேரும் சிறுவனிடம் செல்போனை பறித்துச சென்றது தெரியவந்தது. இதையடுத்து பஷீர் மற்றும் மாடசாமி ஆகிய 2 பேரையும் இன்ஸ்பெக்டர் ராஜாராம் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தார்.


Next Story