சிலையை திருட முயன்ற 2 பேர் கைது


சிலையை திருட முயன்ற 2 பேர் கைது
x

சிலையை திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே மணியன் குறிச்சியில் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு எதிரே சிதிலமடைந்த தேர் ஒன்று உள்ளது. அந்தத் தேரில் மரத்தினாலான கருப்புசாமி சிலையை மாமல்லபுரத்தை சேர்ந்த பத்மநாபன் (வயது 42), போடி புதுகாலனியை சேர்ந்த மணிகண்டன் (43) ஆகியோர் திருடி உள்ளனர். இதை கண்ட பொதுமக்கள் அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து மரத்திலான கருப்புசாமி சிலை மற்றும் அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்தனர்.


Next Story