ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்ட 2 பேர் கைது
ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
துவரங்குறிச்சியை அடுத்த அதிகாரம் அருகே உள்ள சொரியம்பட்டியில் தைப்பூசத்தை முன்னிட்டு அங்குள்ள பழனியாண்டவர், குண்டூர் கருப்பசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது உள்ளூர் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் போலீசார் காளைகளை அவிழ்த்து விட அனுமதி மறுத்தனர். மேலும் அங்கு மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனுமதியின்றி ஒரு காளை அவிழ்த்து விடப்பட்டது. இதையறிந்த போலீசார் காளையை அவிழ்த்து விட்ட அதிகாரத்தை சேர்ந்த ராமசந்திரன் (வயது 29), அவரது சகோதரர் பாலமுருகன் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் திருப்பி அனுப்பி விடப்பட்டது.
Related Tags :
Next Story