நகை பறிப்பு வழக்கில் 2 பேர் கைது


நகை பறிப்பு வழக்கில் 2 பேர் கைது
x

நகை பறிப்பு வழக்கில் ௨ பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி தெய்வானைநகரை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி ரேணுகாதேவி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் தெய்வானை நகர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ரேணுகாதேவி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன்அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினார். இதில் சிவகாசி முத்துராமலிங்க நகரை சேர்ந்த சிவக்குமார் (வயது 32) என்பவர் நதை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்தனர். அதில் மேலும் 2 நகை பறிப்பு சம்பவங்களிலும் சிவக்குமார் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை தூத்துக்குடியை சேர்ந்த செந்தில்குமார் (30) என்பவரிடம் கொடுத்து அடகு வைத்து பணம் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.


Related Tags :
Next Story