குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனா்

ஈரோடு

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் என்கிற ஆனந்தகுமார் (வயது 38). இவர், மீது கஞ்சா, லாட்டரி விற்றதாகவும், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத்தொடர்ந்து ஆனந்தகுமார் கஞ்சா விற்றதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈரோடு மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல், ஈரோடு மரப்பாலம் குயவன் திட்டு பகுதியை சேர்ந்த உதயகுமார் மகன் முகேஷ் (22). இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கஞ்சா விற்றதாக கைதாகி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முகேஷ் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இந்த நிலையில் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ஆனந்தகுமார், முகேஷ் ஆகிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ஈரோடு மதுவிலக்கு போலீசார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆனந்தகுமார், முகேஷ் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.


Next Story